spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலால் சலாம் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினிகாந்த்.......லேட்டஸ்ட் அப்டேட்!

லால் சலாம் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினிகாந்த்…….லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் ரஜினி லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்காக இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

we-r-hiring

இதற்கு இடையில் ரஜினிகாந்த் தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் செந்தில், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கின்றனர். லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக நிரோஷா நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதால் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இப்படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

மொய்தீன் வாயாக கௌரவ வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் இப்படத்தில் 2 சண்டை காட்சிகள் உட்பட குறைந்தது ஒரு மணி நேரமாவது இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரம் கிட்டத்தட்ட பாட்ஷா மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி சம்பந்தமான காட்சிகள் புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினி தனது காட்சிகள் சம்பந்தமான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி இவரை வழி அனுப்பி வைத்துள்ளனர்.

MUST READ