- Advertisement -
துபாயில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இத்திரைப்பத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க துபாய் புறப்பட்டுச் சென்றார். அங்கு சில நாட்களுக்கு தங்கிய அவர், லுலு குழுமத் தலைவரை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வரவேற்பை பெற்றன.



