- Advertisement -
புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.
தமிழ் திரையுலகில் ஸ்டைல் எனும் வார்த்தை பிரபலமாக்கிய பெருமை இவருக்கு உண்டு என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தான். கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்து. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன்.
#Rajinikanth upcoming film #Vettaiyan shooting is currently going in #Pondicherry. A video is taken at the shooting spot & #Thalaivar walk is Stylish. Other actor walks like a tortoise🐢 but #Thalaivar walks like a Tiger🐯
Rajinikanth:The most energetic person🔥@rajinikanth pic.twitter.com/cMCzeRWeeK
— Udayakumar (@Udaya_rks) January 12, 2024
ரஜினி நடிக்கும் 170-வது திரைப்படம் இதுவாகும். இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். படத்தில் ரஜினியுடன் சேர்ந்து அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இப்படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைத்து அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
#Thalaivar today from #Vettaiyan shooting spot
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#SuperstarRajinikanth | #Rajinikanth | #superstar @rajinikanth | #Jailer | #Lalsalaam | #Thalaivar171 | #Thalaivar172 | #Thalaivar173 pic.twitter.com/cLWf05qnS7
— Suresh balaji (@surbalutwt) January 12, 2024
