- Advertisement -
பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனது காதலை சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஜிஷா விஜயன். மாறுபட்ட கதைக்களத்தில் நடிப்பதில் ரஜிஷா கை தேர்ந்தவர். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜூன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மலையாளத்திலிருந்து தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ரஜிஷா நடித்திருப்பார்.
