Homeசெய்திகள்சினிமாஅமரன் படத்திற்காகச் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார் ராஜ்குமார் பெரியசாமி!

அமரன் படத்திற்காகச் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார் ராஜ்குமார் பெரியசாமி!

-

- Advertisement -

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி உருவான ‘அமரன்’ திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.அமரன் படத்திற்காகச் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார் ராஜ்குமார் பெரியசாமி!

இப்படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவுக்கும் தனது திறமைக்கும் தேசிய அளவில் மாபெரும் அங்கீரத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

we-r-hiring

ராஜ்குமார் பெரியகாமியின் இயக்கத்திற்குக் கிடைத்த தேசிய மகுடம்
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்ததுடன், விமர்சகர்களாலும் பாரட்டப்பட்டது.

இயக்கத் திறன் மற்றும் நேர்த்தி: இந்திய இராணுவ வீரரின் வீரத்தையும், அவரது குடும்பத்தின் உணர்வுகளையும் எந்தவித செயற்கைத்தனமும் இன்றி மிகவும் எதார்த்தமாகவும் பிரம்மாண்டமாகவும் திரையில் கொண்டுவந்த ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கம் பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

தேசிய விருது அங்கீகாரம்: இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை ராஜ்குமார் பெரியசாமி தட்டிச் சென்றுள்ளார்.

திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அமரன்’ படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்!

MUST READ