spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெஜிடேரியன்னு சொன்னீங்க, ஆனா இப்போ... கேலிக்கு உள்ளான ரஷ்மிகா!

வெஜிடேரியன்னு சொன்னீங்க, ஆனா இப்போ… கேலிக்கு உள்ளான ரஷ்மிகா!

-

- Advertisement -

அசைவ உணவிற்கான விளம்பரத்தில் நடித்ததற்காக ரஷ்மிகாவை மெடிசின்கள் கலாய்த்து வருகின்றனர் ‌

நடிகை ரஷ்மிகா மந்தானா 3 வருடங்களுக்கு முன்பு தான் முழுவதுமாக சைவத்திற்கு மாறி உள்ளதாக அறிவித்தார். ஆனால் கடைசி சில வாரங்களாக அவர் கேலிக்கு உள்ளாகி உள்ளார். ஏனென்றால் அவர் சிக்கன் பர்கர் சாப்பிடுமாறு ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

we-r-hiring

பீஷ்மா படத்தில் ரிலீசின் போது பல நேர்காணல்களில் ரஷ்மிகா தான் முழுவதுமாக சைவத்திற்கு மாறி உள்ளதாக தெரிவித்து வந்தார். தற்பொழுது ஒரு பர்கர் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடராக மாறி உள்ளதை அடுத்து ஒரு சிக்கன் பர்கரை உற்சாகத்துடன் கடித்து சாப்பிடுமாறு ஒரு போஸ்டரில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஒன்று சொல்வது பின்னர் அதற்கு மாறாக செய்வது ஒன்றும் ரஷ்மிகாவுக்கு புதிதல்ல என்று கன்னட ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால், சைவத்திற்கு மாறிய ஒருவர் மீண்டும் அசைவத்திற்கு மாறக்கூடாதா என்ற வகையிலும் ரஷ்மிகாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ