Homeசெய்திகள்சினிமாஆஸ்திரேலியாவில் குதூகலிக்கும் ராஷ்மிகா மந்தனா... புகைப்படங்கள் இணையத்தில் வைரல்...

ஆஸ்திரேலியாவில் குதூகலிக்கும் ராஷ்மிகா மந்தனா… புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…

-

- Advertisement -
ஆஸ்திரேலியாவில் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமன்றி தற்போது இந்தியிலும் அனிமல் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக சின்மயின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இது தவிர பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்திலும் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சிக்கந்தர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அட்டைப் படத்திற்கான அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

MUST READ