விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வரும் நவம்பர் 3-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்தம். இதை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கண்ணன் நாராயணன் இசையிலும் அமர்நாத் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியானது.
இப்படம் கடந்த அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், ரத்தம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் நவமபர் 3-ம் தேதி ரத்தம் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.