spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹாலிவுட்டில் அறிமுகமாகும் ரவி மோகன் பட நடிகை!

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ரவி மோகன் பட நடிகை!

-

- Advertisement -

ரவி மோகன் பட நடிகை ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ரவி மோகன் பட நடிகை!பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், எம்பி ஆகவும் வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். இவர் தமிழில் ரவி மோகன் நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர், பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இது தவிர இவர் மாதவன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எமர்ஜென்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஏற்பட்ட பல பிரச்சனைகளால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட் நிலையில், தாமதமாக வெளியானது. ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ரவி மோகன் பட நடிகை!இந்நிலையில் இவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அனுராக் ருத்ரா இயக்கத்தில் கதா திவாரி திரைக்கதையில் உருவாகும் பிளஸ்ட் பி தி ஈவில் எனும் ஹாரர் படத்தில் நடிக்கப் போகிறாராம் கங்கனா. இது தொடர்பான பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வர நிலையில், படக்குழு இந்த படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ