Homeசெய்திகள்சினிமாரவி மோகன் நடிப்பில் வெளியான 'காதலிக்க நேரமில்லை'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!

ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’…. ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!

-

- Advertisement -

காதலிக்க நேரமில்லை படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ரவி மோகன் நடிப்பில் வெளியான 'காதலிக்க நேரமில்லை'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கராத்தே பாபு, ஜீனி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள இவர் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து லால், வினய் ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்து இருந்தார். ரவி மோகன் நடிப்பில் வெளியான 'காதலிக்க நேரமில்லை'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்நிலையில் படம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ