Homeசெய்திகள்சினிமாஇத நாங்க எதிர்பார்க்கலையே.... லோகேஷ் கனகராஜின் எல்சியு-வில் இணையும் ரவி மோகன்!

இத நாங்க எதிர்பார்க்கலையே…. லோகேஷ் கனகராஜின் எல்சியு-வில் இணையும் ரவி மோகன்!

-

- Advertisement -

நடிகர் ரவி, மோகன் லோகேஷ் கனகராஜின் எல்சியு- வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.இத நாங்க எதிர்பார்க்கலையே....லோகேஷ் கனகராஜின் எல்சியு-வில் இணையும் ரவி மோகன்!

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் இவர் எல்சியு என்ற கான்செப்ட்டின் கீழ் கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். அடுத்தது கைதி 2, விக்ரம் 2 போன்ற படங்களை இயக்க உள்ளார். இதற்கிடையில் தயாரிப்பாளராக உருவெடுத்த லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார்.இத நாங்க எதிர்பார்க்கலையே....லோகேஷ் கனகராஜின் எல்சியு-வில் இணையும் ரவி மோகன்! அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தை தயாரிக்கிறார் லோகேஷ். இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும் இந்த படமானது லோகேஷின் எல்சியு- வில் இணைந்திருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.இத நாங்க எதிர்பார்க்கலையே....லோகேஷ் கனகராஜின் எல்சியு-வில் இணையும் ரவி மோகன்! அதாவது ‘பென்ஸ்’ படத்தில் ரவி மோகனின் கதாபாத்திரம் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி வருகின்றன. இதன்மூலம் லோகேஷ் கனகராஜின் எல்சியு- வில் ரவி மோகன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் ரவி மோகன், லோகேஷ் இயக்கும் கைதி 2 மற்றும் விக்ரம் 2 ஆகிய படங்களிலும் நடிப்பார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ