Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தெலுங்கு மாஸ் நடிகர்!

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தெலுங்கு மாஸ் நடிகர்!

-

- Advertisement -

ரின்ஸ் பட இயக்குனருடன் தெலுங்கு நடிகர் ரவிதேஜா கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் ஜாதிரட்னாலு படத்தை இயக்கியிருந்தார் அனுதீப். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதையடுத்து தமிழ் பக்கம் வந்த அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படத்தை இயக்கினார்.

we-r-hiring


ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அனுதீப் எந்த நடிகரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது அனுதீப் மாஸ் ரவிதேஜா நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் டோலிவுட் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. தோல்வி கொடுத்த இயக்குனருடன் அவர் எப்படி கூட்டணி அமைக்கிறார் றன்று பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.


ஆனால் பலமுறை தோல்வி படங்கள் கொடுத்த ஹரிஷ் ஷங்கர் உடனே ரவிதேஜா பலமுறை கூட்டணி அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுதீப் ரவிதேஜாவுக்கு ஒரு நகைச்சுவைக் கதையை விவரித்ததாகவும், அதில் இயக்குனர் திறனைக் கண்டு ஈர்க்கப்பட்ட நடிகர் உடனே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

MUST READ