நடிகர் ஆதி மிருகம், அரவான், மரகத நாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஆதி நடிப்பில் பாட்னர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து ஆதி,சப்தம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார். ஈரம் திரைப்படத்தில்
ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூப்பர் நேச்சுரல் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆதி மற்றும் அறிவழகன் கூட்டணியில் சப்தம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, அபிநயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகியிருந்தது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் சமீபத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டு, முடிவடைந்தன. ஈரம் படத்தைப் போல கிரைம் திரில்லர் கதைக்களத்தில் சஸ்பென்ஸ் ஹாரர் படமாக இந்த படம் தயாராகியுள்ளது.
#Eeram Trio @dirarivazhagan @AadhiOfficial & @MusicThaman is back 🌊 A Spine-chilling symphony that echoes through the depths of sound horror🔊
Prepare your eyes for a spooky symphony, First look on 14th December 2023! Stay stuned✨
Produced by @7GFilmsSiva @Aalpha_frames pic.twitter.com/h7ag0aPqnW
— 7G Films (@7GFilmsSiva) December 13, 2023
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.