ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீசுக்கு சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் “சிங்கப்பூர் சலூன்”. ரேடியோ ஜாக்கியாக இருந்து படிப்படியாக தன்னை மெருகேற்றி எல்.கே. ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் என அடுத்தடுத்து வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. தன்னுடைய அடுத்த படத்திற்காக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கிய இயக்குனர் கோகுலுடன் கூட்டணி அமைத்தார். வழக்கமாகவே கோகுல் இயக்கும் படங்களில் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். ஆர்.ஜே.பாலாஜியை கதாநாயகனாக வைத்து எடுத்துள்ள சிங்கப்பூர் சலூன் படமும் காமெடிக்குப் பஞ்சம் இல்லாமல் இருக்கும் எனத் தெரிகிறது. சர்ப்ரைஸ் மேட்டராக இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும் கிசுகிசுக்கள் பரவி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த ஊடக நண்பர்கள் படம் நன்றாக உள்ளது என கருத்து தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. முன்னதாக இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாகத் திட்டமிடப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் தான் வரும் ஜனவரி 25 அன்று படம் திரையரங்களில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் சத்யராஜ், லால், மீனாட்சி சவுத்ரி, கிஷன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ரிலீசாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -