Homeசெய்திகள்சினிமாதன்ஷிகாவின் தி ப்ரூஃப்... வெளியானது முன்னோட்டம்...

தன்ஷிகாவின் தி ப்ரூஃப்… வெளியானது முன்னோட்டம்…

-

- Advertisement -
சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் தி ப்ரூஃப் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு பல படங்கள் வெளியாகும்போது, பல கதாநாயகிகளும் அறிமுகமாகின்றனர். பலர் முன்னணி நாயகிகளாக வலம் வருகின்றனர். இதில் வளர்ந்து வரும் நாயகிகளும் பலர் உண்டு. அந்த வகையில் சாய் தன்ஷிகாவும் அடங்குவார். கடந்த 2006-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான தன்ஷிகாவுக்கு, முதல் படம் கை கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பேராண்மை படத்திலும் அவர் நடித்திருந்தார். இப்படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்க 5 பேர் நாயகிகளாக நடித்திருந்தனர். அதில் இவரும் ஒருவர்.

பேராண்மை படம் ஹிட் அடிக்க, தன்ஷிகாவுக்கும் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. அந்த வகையில், அருண் விஜய் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அடுத்து அரவான், அதர்வா நடித்த பரதேசி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தார். இதையடுத்து, பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தின் மூலம் தன்ஷிகாவுகக்கு கிடைத்த வரவேற்பு அவரை முன்னணி நடிகையாக முன்னிறுத்தியது. தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் அவர் நடித்து அசத்தினார்.

துல்கர் சல்மானுடன் இணைந்து சோலோ என்ற படத்தில் தன்ஷிகா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பல படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தன்ஷிகா தி ப்ரூஃப் என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். கோல்டன் ஸ்டுடியோசின் கீழ் கோமதி சத்யா இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளார். நடன இயக்குநரான ராதிகா மாஸ்டர் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தி ப்ரூஃப் படத்தின் முன்னோட்டம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகரும், இயக்குநருமான சசிகுமார் படத்தின் முன்னோட்டத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

MUST READ