பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கே ஜி எஃப் 1, கே ஜி எஃப் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. கே ஜி எஃப் படத்தைப் போன்று ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படம் செப்டம்பர் 28 இல் வெளியாகும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையாத காரணத்தால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதன் கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி சலார் படத்தின் முன்னோட்டம் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.