spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசமந்தாவின் புதிய முயற்சி... விரைவில் டேக் 20 பாட்காஸ்ட் தொடக்கம்...

சமந்தாவின் புதிய முயற்சி… விரைவில் டேக் 20 பாட்காஸ்ட் தொடக்கம்…

-

- Advertisement -
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்திந்திய மொழிகளிலும் கொடி கட்டி பறக்கும் ஒரே நடிகை சமந்தா. அடுத்தடுத்து படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர்கோலிவுட் நடிகையாக மட்டுமன்றி இந்திய அளவில் ஹிட் நடிகையாக உருவெடுத்துள்ளார். தமிழில் டாப் நடிகையாக உருவெடுத்த சமந்தா அதேசமயம், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். தமிழில் விஜய், சூர்யா, விஷால், அதர்வா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதேபோல தெலுங்கிலும், ராம்சரண், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர்.பவண் கல்யாண் என டாப் நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இதையடுத்து பாலிவுட் பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சமந்தா நடித்திருப்பார்.

தற்போது சிட்டாடெல் இந்தியா படத்தின் பணிகளில் சமந்தா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பாட்காஸ்ட் சேனல் ஒன்றை சமந்தா தொடங்கி இருக்கிறார். பல நடிகைகள் யூ டியூப் சேனல், அழகு சாதன தொழிலில் ஆர்வம் செலுத்தும் சமயம், சமந்தா மட்டும் உடல்நலம் சார்ந்த தகவல்களை பாட்காஸ்ட் சேனலை தொடங்கி உள்ளார். உடல்நலம் பற்றிய டேக் 20 எனப்படும் பாட்காஸ்டின் முதல் வீடியோ பிப்ரவரி 19ம் தேதி வெளியாக உள்ளது.

MUST READ