spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாலிவுட் நடிகைக்கு தைரியம் சொன்ன நடிகை சமந்தா

பாலிவுட் நடிகைக்கு தைரியம் சொன்ன நடிகை சமந்தா

-

- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான். இவர் அண்மையில் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். நோயில் இருந்து, விரைவில் மீள்வேன் என்றும், இந்த இக்கட்டான நேரத்தில் ரசிகர்கள் அனைவரும் என்னுடன் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். ஹினா கான் விரைவில் குணமாக வேண்டி பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகை சமந்தாவும், ஹினா கான் குணமடைய ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து பதிவிட்ட சமந்தா, நோய் பாதிப்பில் இருந்து குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். தைரியமாக இருங்கள். ஹினாகான் ஒரு போராளி என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து, சமந்தாவுக்கு நன்றி தெரிவித்து ஹினாகான் பதிவிட்டிருக்கிறார். உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். நடிகை சமந்தாவும், அரிய வகை சரும நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ