spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடிப்பில் உருவாகி ‘டிடி ரிட்டர்ன்ஸ்’… வியக்க வைத்த வியாபாரம்!

சந்தானம் நடிப்பில் உருவாகி ‘டிடி ரிட்டர்ன்ஸ்’… வியக்க வைத்த வியாபாரம்!

-

- Advertisement -

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமான இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார். அதையடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

we-r-hiring

தற்போது படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. படத்திற்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சியில் ராம்பாலாவுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்டா ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஜூலை 28 ஆம் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது.தற்போது இந்தப் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் சுமார் 6.5 கோடிக்கு படத்தின் திரையரங்கு உரிமை வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சினிமா வட்டத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் சரியாக வியாபாரம் ஆகவில்லை. இருப்பினும் படம் இந்த தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

MUST READ