spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு... ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு...

சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு… ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…

-

- Advertisement -

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருந்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இன்று வரை ஹீரோ வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன், 80ஸ் பில்டப் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இறுதியாக சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி கவனம் ஈர்த்தது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் இங்க நான் தான் கிங்கு. இத்திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இதில் சந்தானத்துடன் இணைந்து தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பிரியாலயா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ்தேதி தள்ளிப்போகியுள்ளது. அதன்படி, வரும் மே மாதம் 17-ம் தேதி இங்க நான் தான் கிங்கு படம் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ