- Advertisement -
ரஜினிகாந்த் தற்போது 170-வது திரைப்படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. ஜெய் பீம் பட புகழ் ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முழுவீச்சில்நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இப்படத்தைத் தொடர்ந்து 171-வது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து ரஜினி பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு அனிருச் இசை அமைக்கிறார். அண்மையில் இப்படத்திற்கு கூலி என்று தலைப்பு வைத்து, அத்துடன் டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.




