- Advertisement -
தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர் சத்யராஜ் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் தற்போது பல படங்களில் அவர் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். குணச்சித்திர வேடங்களிலும், தந்தை வேடங்களிலும் சத்யராஜ் நடித்து வருகிறார். சத்யராஜூக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் சிபி சத்யராஜ் கோலிவுட்டில் நாயகனாக பல படங்களில் நடித்திருக்கிறார். சத்யராஜும், சிபியும் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்து ஹிட் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சத்யராஜினின் மகள் திவ்யா சத்யராஜ், அரசியலுக்கு வர போகிறார் என்றும், பாஜகவில் இணைய போகிறார் என்றும் தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. சத்யராஜ் தி.க. கொள்கைகளில் ஆர்வம் கொண்டனர். ஆனால், அவரது மகள் திவ்யா பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்களும், ரசிகர்களும் எழுப்பி வந்தனர்.
https://www.instagram.com/reel/C4Zz6EBrXEX/?igsh=OHNzN216cjFwZWRn