spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசைத்தான் பட புரமோசன் தீவிரம்... பாலிவுட்டை கலக்கும் ஜோதிகா...

சைத்தான் பட புரமோசன் தீவிரம்… பாலிவுட்டை கலக்கும் ஜோதிகா…

-

- Advertisement -
சைத்தான் படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவரது புகைப்படங்கள் இணையத்தி வைரலாகி வருகின்றன.

தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் அறிமுகம ஆனவர் நடிகை ஜோதிகா. முதல் படமே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் இணைந்து நடித்தார். இத்திரைப்படத்தையும் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கி இருந்தார். குஷி படம் மாபெரும் ஹிட் படமாக மாறியதால் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ஜோதிகா. அடுத்தடுத்து ஜோதிகாவுக்கு ஏறுமுகம் தான். இதைத் தொடர்ந்து சூர்யாவுடன் மட்டும் கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் ஜோதிகா நடித்துள்ளார்.

இந்த 5 திரைப்படங்களுமே கோலிவுட்டின் மைல்கல்லாக உள்ளன. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் என பல வெற்றிப் படங்களில் நடித்தார். அண்மையில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற மலையாள படத்திலும் நடித்தார்.
we-r-hiring

இறுதியாக ஜோதிகா நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி உள்ள திரைப்படம் சைத்தான். அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் செல்லும் அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

MUST READ