spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉலக நாயகனுக்காக சங்கர் வைத்த டைட்டில் கார்டு ....... திரையரங்கை அதிர வைத்த 'இந்தியன் 2'!

உலக நாயகனுக்காக சங்கர் வைத்த டைட்டில் கார்டு ……. திரையரங்கை அதிர வைத்த ‘இந்தியன் 2’!

-

- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உலகம் முழுவதும் இன்று ஜூலை 12 வெளியாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. உலக நாயகனுக்காக சங்கர் வைத்த டைட்டில் கார்டு ....... திரையரங்கை அதிர வைத்த 'இந்தியன் 2'!இந்தப் படத்தை சங்கர் இயக்கியிருக்கிறார். லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் கமல், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஆந்திரா போன்ற மாநிலங்களில் திரையிடப்பட்டு வருகிறது. ரசிகர்களும் உற்சாகத்துடன் படத்தை கண்டு களித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சென்ற பார்வையாளர்களுக்கு இந்தியன் 2 படத்தின் டைட்டில் கார்டு மிகப்பெரிய கூஸ்பம்ஸ் கொடுத்திருக்கிறது. அதாவது உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்தது முதல் குணா, நாயகன், அவ்வை சண்முகி, ஆளவந்தான், இந்தியன், தசாவதாரம், விஸ்வரூபம் என பல கெட்டப்களில் இருக்கும் கமல்ஹாசன் உடைய முகம் ஒரு மாஸ்க் போல ஒவ்வொன்றாக கலந்து கடைசியில் இந்தியன் 2 படத்தில் சேனாபதி தாத்தாவின் முகம் வருகிறது. இதனை ரசிகர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

MUST READ