Homeசெய்திகள்சினிமாஎன்னோட டப்பிங் முடிஞ்சு, படத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்… மாவீரன் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

என்னோட டப்பிங் முடிஞ்சு, படத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்… மாவீரன் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

-

மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்‘ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, மிஸ்கின், சரிதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.
இந்த படம் ‘மாவீரன்’ என்று தமிழிலும் ‘மாவீருடு’ என்று தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்தப் படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மாவீரன் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்தப் படத்தின் டப்பிங் வேலை தொடங்கின. தற்போது மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

‘மாவீரன் படத்தின் என்னுடைய பகுதிக்கான டப்பிங்கை நிறைவு செய்துவிட்டேன். இந்தப் படத்தில் மடோன் அஸ்வின் மற்றும் அவரது குழுவினர் எவ்வாறு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன். இந்தப் பயணம் சிறப்பானதாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ