spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபு- விஜய் கூட்டணியில் வில்லனாக இணையும் ‘மெர்சல்’ நடிகர்!

வெங்கட் பிரபு- விஜய் கூட்டணியில் வில்லனாக இணையும் ‘மெர்சல்’ நடிகர்!

-

- Advertisement -

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படம் வரும் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியானது.இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி எஸ் அகோரம் கல்பாத்தி எஸ் கணேஷ் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 25வது படம் இது.

we-r-hiring

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கும் பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அப்பிரபலம் வேறு யாரும் அல்ல மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா தான். தளபதி 68 -லும் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விஜயின் சினிமா கேரியரில் மிக பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த குஷி படத்தை எஸ்ஜே சூர்யா தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘மெர்சல்’ படத்தில் வில்லனாக மாஸாகவும் கிளாஸாகவும் எஸ் ஜே சூர்யா களம் இறங்கி இருந்தார். மெர்சல் படத்தில் அவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு ‘வாரிசு’ படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இணைந்திருந்தார். தற்போது மீண்டும் விஜய் எஸ் ஜே சூர்யா மோத இருக்கும் இத்திரைப்படம் வெறித்தனமாக இருக்கப்போகிறது என்று நெட்டிசன்கள் ஆர்வமாகியுள்ளனர்.

MUST READ