spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி பட நடிகைக்கு விரைவில் திருமணம்... தீயாய் பரவும் செய்தி...

ரஜினி பட நடிகைக்கு விரைவில் திருமணம்… தீயாய் பரவும் செய்தி…

-

- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் பிரபல அரசியல் தலைவர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றசோனாக்சிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. மேலும், அத்திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன.

தமிழில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் கோலிவுட் திரையுலகிற்கும் அறிமுகமானார். நடிகர் ரஜினிகாந்தும், சோனாக்சியின் தந்தை சத்ருகான் சின்ஹாவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். லிங்கா படத்திற்கு பிறகு அவர் தமிழில் திரைப்படம் ஏதும் நடிக்கவில்லை. விஜய் நடித்த கில்லி படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூருக்கு ஜோடியாக சோனாக்சி நடித்திருந்தார்.

we-r-hiring

 

இந்நிலையில், நடிகை சோனாக்சி சின்ஹாவும், பிரபல நடிகர் ஜாகிர் இக்பாலும் காதலிப்பதாக அண்மைக் காலமாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், இருவரும் இதற்கு மறுப்பு தெரிவித்து தாங்கள் நண்பர்கள் தான் என்று விளக்கமும் அளித்தனர். இந்நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், வரும் 23-ம் தேதி பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வௌியாகி இருக்கிறது.

MUST READ