Homeசெய்திகள்சினிமாமே மாத இறுதியில் ரிலீஸாகும் சூரியின் கருடன்!

மே மாத இறுதியில் ரிலீஸாகும் சூரியின் கருடன்!

-

நடிகர் சூரி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதே சமயம் நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். மே மாத இறுதியில் ரிலீஸாகும் சூரியின் கருடன்!இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தர அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார். அதன்படி கொட்டுக்காளி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் நடிகர் சூரி கருடன் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க வெற்றிமாறன் கதையில் படமானது உருவாகி வருகிறது. இதில் சூரி தவிர சசிகுமார் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மே மாத இறுதியில் ரிலீஸாகும் சூரியின் கருடன்!இந்த படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு இந்த படம் 2024 மே மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி கருடன் திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகிறது. இந்த படமும் நடிகர் சூரிக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ