சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார். எப்படியாவது கங்குவா திரைப்படத்தின் மூலம் தான் இழந்த வெற்றியை திரும்ப பெற்று விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சிறுத்தை சிவா. அதன்படி இவர் வரலாற்று திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். 3D தொழில் நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடத்தப்பட்டது. சூர்யாவின் கெரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகும் இந்த கங்குவா படமானது பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதன்படி சமீபத்தில் இந்த படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இதற்கிடையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதற்காக ட்ரெய்லர் வேலைகளையும் படக்குழு ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -