சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொது குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்பட 200 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.
இக்கூட்டத்தில் திரையரங்குகளில் படம் முடிந்த பின் எடுக்கப்படும் விமர்சனங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கால் சீட் கொடுக்காத நடிகர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக 5 முக்கிய நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் முன் தொகை வாங்கிக் கொண்டு கால்ஷீட் வழங்காமல் இழுத்தடிப்பது போன்ற காரணத்திற்காக சிம்பு, விஷால், எஸ் ஜே சூர்யா, அதர்வா, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் முன் தொகை பெற்றுக் கொண்டு கால்ஷீட் தராதது குறித்து 5 நடிகர்களும் விளக்கம் அளிக்காத பட்சத்தில் அவர்களின் படங்களுக்கு இனி எந்தவித ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது


