Homeசெய்திகள்சினிமாதலைவர் 171 படத்தில் இணையும் பிரபல மலையாள இயக்குனர்!

தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல மலையாள இயக்குனர்!

-

தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல மலையாள இயக்குனர்!ரஜினி தனது ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு தலைவர் 170 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாஸில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல மலையாள இயக்குனர்! இந்தப் படத்தை விரைவில் முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் இணைய இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ரஜினி நடிப்பில் இயக்க இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதன் படப்பிடிப்புகளை தொடங்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தலைவர் 171 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தத்தில் சிவகார்த்திகேயன் கையெழுத்திட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் நடிகர் மம்மூட்டி, தலைவர் 171 படத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்திருந்தார். தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல மலையாள இயக்குனர்!தலைவர் 171 இல் நடிப்பதற்கு இதுவரை தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனவும் வந்தால் அது நன்றாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தான் மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் பிரித்விராஜ் சுகுமாரன் தலைவர் 171 இல் நடிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரித்விராஜ் சுகுமாரன் தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் (லூசிபர் 2) எம்புரான் படத்தை இயக்கி வருகிறார் . மேலும் பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ