spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதியேட்டரில் அஜித்தின் 'சவதீகா' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட முதியவர்!

தியேட்டரில் அஜித்தின் ‘சவதீகா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட முதியவர்!

-

- Advertisement -

முதியவர் ஒருவர் விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற ‘சவதீகா’ பாடலுக்கு தியேட்டரில் குத்தாட்டம் போட்டுள்ளார்.தியேட்டரில் அஜித்தின் 'சவதீகா' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட முதியவர்!

கடந்த பிப்ரவரி 6 அன்று அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையிடப்பட்டது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருந்தனர். காதல் கலந்த ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பலரும் இப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் தான் முதியவர் ஒருவர் திரையரங்கில் இளைஞர்களுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற ‘சவதீகா‘ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இப்படம் முதல் நாளில் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் இரண்டாம் நாளில் ரூ. 50 கோடியை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. வாரத்தின் இறுதி நாள் என்பதால் இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ