வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ‘ படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிக்கு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய், லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக லியோ படத்திற்காக இணைந்துள்ளனர்.


இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ப்ரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தை அடுத்து விஜய் எந்த இயக்குனர் உடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. அட்லீ, ஏஆர் முருகதாஸ் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் வெங்கட் பிரபு விஜயின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெங்கட் பிரபு சொன்ன கதை விஜய்க்கு பிடித்துவிட்டதால் விஜய் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இதையடுத்து சோசியல் மீடியாக்களில் விஜய் ரசிகர்கள் இந்தத் தகவலைக் கொண்டாடி வருகின்றனர். ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அடங்கிய ஆக்ஷன் என்டர்டெய்னராக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.
அஜித்தை வைத்து மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு அடுத்து விஜயை வைத்து மற்றுமொரு பிளாக்பஸ்டர் கொடுக்கத் தயாராகி வருகிறார்.


