3 தமிழ் திரைப்படங்கள் 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனை படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மெய்யழகன்
கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் தான் வாழை. இந்தப் படம் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில் அமரன், மெய்யழகன், வாழை ஆகிய மூன்று படங்களும் 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. அதாவது இந்த விழாவானது பெங்களூரு ஓரியன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில் கிட்டத்தட்ட 60க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதன்படி இந்தியா, ஆசியா, உலகம், கன்னட திரைப்படம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் பல படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய இந்த விழா வருகின்ற 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.