Homeசெய்திகள்சினிமாவெளியான முதல் நாளே இணையத்தில் லீக்கான 'தக் லைஃப்'.... அதிர்ச்சியில் படக்குழு!

வெளியான முதல் நாளே இணையத்தில் லீக்கான ‘தக் லைஃப்’…. அதிர்ச்சியில் படக்குழு!

-

- Advertisement -

தக் லைஃப் திரைப்படம் வெளியான முதல் நாளே இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் நேற்று (ஜூன் 5) திரைக்கு கொண்டுவரப்பட்ட படம் தான் தக் லைஃப்.'தக் லைஃப்' படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு? இந்த படத்தை மணிரத்னம் இயக்க கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்திருந்தார். ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் முதல் நாள் வசூலில் இப்படம் ரூ.45 கோடிக்கும் அதிகமாக வசூம் செய்துள்ளது என தகவல் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தயாரிப்பாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வெளியான முதல் நாளே இணையத்தில் லீக்கான 'தக் லைஃப்'.... அதிர்ச்சியில் படக்குழு!அதன் அடிப்படையில் சட்டவிரோதமாக தக் லைஃப் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் தக் லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ