தக் லைஃப் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க மணிரத்னம் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது வருகின்ற ஜூன் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை (ஜூன் 1) முதல் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அதேசமயம் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
Every Thug needs a theme, this one will roar tomorrow at 5 pm#VinveliNayaga #VisvadaNaayakaa #VeereKainaat #Thuglife Bookings open from tomorrow 8:01AM#ThuglifeFromJune5#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_… pic.twitter.com/lCljpixs7G— Raaj Kamal Films International (@RKFI) May 31, 2025
இந்நிலையில் நாளை (ஜூன் 1) மாலை 5 மணி அளவில் இந்தப் படத்தில் இடம் பெற்ற விண்வெளி நாயகா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ருதிஹாசன் குரலில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.