Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் மகள் மறைவு..... லியோ அப்டேட் இன்று இல்லை.... படக்குழு அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் மகள் மறைவு….. லியோ அப்டேட் இன்று இல்லை…. படக்குழு அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மறைவு காரணமாக லியோ படத்தின் அப்டேட் என்று இல்லை என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் லியோ படத்தில் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டே இருக்கும் என அறிவித்திருந்தார். அதன்படி தினமும் லியோ படத்தில் தெலுங்கு போஸ்டர், கன்னட போஸ்டர் என ஒவ்வொரு போஸ்டர்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

we-r-hiring

இந்நிலையில் இன்று விஜய் ஆண்டனியின் மகள் மீரா தனது இல்லத்தில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் திரையுலகப் பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் லியோ படத்தின் அப்டேட்டுகள் இன்று இல்லை என லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் விஜய் ஆண்டனியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

MUST READ