திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தி ரோட். இந்தப் படத்தை அருண் வசீகரன் இயக்கியுள்ளார். இதில் திரிஷாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் சபீர், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். AAA சினிமா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார்.
மதுரையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து நடிகை த்ரிஷா வீடியோ பகிர்ந்திருந்தார்.
Celebrate #Diwali by watching @trishtrashers ‘s #TheRoad on @ahatamil in 3 days.#TheRoadPremiere #Trisha #SouthQueenTrisha pic.twitter.com/tTKiV8jjd4
— Trisha Krishnan FC (@ActressTrisha) November 7, 2023
இந்நிலையில், நாளை மறுநாள் த்ரிஷாவின் தி ரோட் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஆஹா தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.