spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅறிவித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா இரு பிரம்மாண்ட படங்கள்?.... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

அறிவித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா இரு பிரம்மாண்ட படங்கள்?…. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்குகின்ற இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்ககட்டத்தை எட்டி உள்ளது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கசக்கமாக ஏற்றி விட்டது. இந்தப் படத்தில் சூர்யா, பாபி தியோல், நட்டி நடராஜன், கோவை சரளா, யோகி பாபு, திஷா பதாணி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகப் பிரம்மாண்டமாக அதிக பொருள் செலவில் உருவாகி வரும் கங்குவா படமானது 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் போன்ற காரணத்தால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் கங்குவா படத்தை 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிட இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் கங்குவா திரைப்படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் ,பார்வதி போன்றோர் நடித்துள்ளனர். கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் படும் கொடுமைகளை விவரிக்க கூடிய படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா ரஞ்சித் இப்படத்தை தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து, டப்பிங் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் தங்கலான் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் 2024 ஜனவரி 26 இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 2024 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

we-r-hiring

மிக பிரம்மாண்டமாக வும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த இரண்டு படங்களின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ