Homeசெய்திகள்சினிமாநான் அரசியலுக்கு வருவேன்.... அவர்தான் என் இன்ஸ்பிரேஷன்.... வரலட்சுமி சரத்குமார் பேச்சு!

நான் அரசியலுக்கு வருவேன்…. அவர்தான் என் இன்ஸ்பிரேஷன்…. வரலட்சுமி சரத்குமார் பேச்சு!

-

- Advertisement -

நடிகை வரலட்சுமி சரத்குமார் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.நான் அரசியலுக்கு வருவேன்.... அவர்தான் என் இன்ஸ்பிரேஷன்.... வரலட்சுமி சரத்குமார் பேச்சு! தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்றார். அடுத்தது வில்லியாகவும் நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான மேக்ஸ் திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். இதற்கிடையில் வரலட்சுமிக்கு தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த மதகஜராஜா திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்திருந்தார். நான் அரசியலுக்கு வருவேன்.... அவர்தான் என் இன்ஸ்பிரேஷன்.... வரலட்சுமி சரத்குமார் பேச்சு!இந்த நிலையில் இந்த படம் தொடர்பான பிரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலட்சுமி தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். உண்மையில் அவர் ஒரு அயன் லேடி. அவரைப் போல சினிமாவில் சாதிக்க வேண்டும். அதன் பின்னர் கட்டாயம் அரசியலுக்கு வருவேன்” என்று பேசியுள்ளார் வரலட்சுமி.

MUST READ