ஹிருதயம் கூட்டணியின் வருஷங்களுக்கு ஷேஷம்…. முதல் பாடல் வெளியீடு…
- Advertisement -
மலையாளத்தில் பெரும் நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகி இருக்கும் வருஷங்களுக்கு ஷேஷம் படத்திலிருந்து முதல் பாடல் வௌியாகி உள்ளது.

பிரேமம் படத்தை போல மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பிரபலம் அடைந்த மாபெரும் ஹிட் திரைப்படம் ஹிருதயம். இப்படத்தில் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். தர்ஷனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். கேரளா, சென்னை இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஹிட் அடித்தன. மேலும், அருண் மற்றும் நித்யா கதாபாத்திரங்களும் பெரிதளவில் பேசப்பட்டன.


இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹிருதயம் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்திற்கு வருஷங்களுக்கு ஷேஷம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் உள்பட பலர் நடிக்கின்றனர். பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியும் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகர் மோகன்லாலுக்கும், இயக்குநர் வினித்தின் தந்தை ஸ்ரீனிவாசனுக்கும் இடையேயான நட்பை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து முதல் பாடல் வௌியாகி உள்ளது. மேலும், இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.