- Advertisement -
தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் மட்டுமன்றி இந்திய திரையுலகில் முன்னணி இயக்குராக உச்சம் தொட்டிருப்பவர் இயக்குநர் அட்லீ. தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான, அட்லீ அடுத்து விஜய்யுடன் இணைந்து தெறிபடத்தை இயக்கினார். கடந்த 2016-ம் ஆண்டு தமிழில் வௌியான திரைப்படம் தெறி. படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன், ஐரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் போலீசாக நடித்திருப்பார். இத்திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது.
