Homeசெய்திகள்சினிமாகௌதம் மேனன்- கமல்ஹாசன் காம்போவின் 'வேட்டையாடு விளையாடு'... ரீரிலீஸ் தேதி அப்டேட்!

கௌதம் மேனன்- கமல்ஹாசன் காம்போவின் ‘வேட்டையாடு விளையாடு’… ரீரிலீஸ் தேதி அப்டேட்!

-

கௌதம் மேனன் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வேட்டையாடு விளையாடு படத்தின் ரீரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் கமல்ஹாசன் கூட்டணியில் ‘வேட்டையாடு விளையாடு‘ திரைப்படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் கமலுடன் ஜோதிகா, பிரகாஷ் ராஜ், கமலானி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் க்ரைம் திரில்லர் படமான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் டிசிபி ராகவன் என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். திரை உலகில் கல்ட் கிளாசிக் படங்களில் வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய இடம் உண்டு.

இவ்வாறு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஜூன் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ