spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுணிவு படத்தைப் போல் உருவாக்கிறதா 'விடாமுயற்சி'?

துணிவு படத்தைப் போல் உருவாக்கிறதா ‘விடாமுயற்சி’?

-

- Advertisement -

நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். துணிவு படத்தைப் போல் உருவாக்கிறதா 'விடாமுயற்சி'?மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோரின் கூட்டணி மீண்டும் இந்த விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்துள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே அஜர்பைஜானில் 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இதன் இறுதி கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விடாமுயற்சி பட குழு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதை தொடர்ந்து படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. துணிவு படத்தைப் போல் உருவாக்கிறதா 'விடாமுயற்சி'?இந்த போஸ்டர்களில் நடிகர் அஜித் ஸ்டைலிஷான லுக்கில் காணப்படுகிறார். அதேசமயம் மூன்று போஸ்டர்களும் படத்தின் கதையை கூறுகிறது. அதாவது ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடித்து வரும் திரிஷாவை வில்லன் கும்பல் கடத்தி விடுவதாகவும் உயிருக்கு உயிரான தன் மனைவியை காப்பாற்ற விடாமுயற்சியுடன் அஜித் போராடி அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் விடாமுயற்சி படத்தின் கதை என்று சில செய்திகள் கசிந்திருந்தன. தற்போது வெளியான போஸ்டர்களும் பயணம், தேடுதல், வேட்டை போன்றவற்றை குறிப்பிடுவது போல் அமைந்துள்ளது. எனவே விடாமுயற்சி படமானது ஒரே நாளில் நடக்கும் திரில்லர் கதையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திலும் ஒரே நாளில் நடப்பது போன்று தான் பெரும்பாலான காட்சிகள் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ