Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'விடாமுயற்சி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மீகாமன், தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி இருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஹாலிவுட் படத்தை தழுவி ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ஆனால் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டாலும் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் இப்படம் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 'விடாமுயற்சி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் இந்நிறுவனம் இந்த படத்தை 2025 மார்ச் மாதத்தில் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ