Homeசெய்திகள்சினிமாஅபுதாபியில் தொடங்கும் 'விடாமுயற்சி' ஷூட்டிங்..... எப்போது தெரியுமா?

அபுதாபியில் தொடங்கும் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்….. எப்போது தெரியுமா?

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். அஜித்தின் 62 வது படமான படம் கடந்த ஜூன் மாதமே தொடங்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் தள்ளிப் போகிறது.

we-r-hiring

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி அபுதாபியில் தொடங்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் திரிஷா மற்றும் ஹுமா குரேஸி கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். சஞ்சய் தத் மற்றும் நடிகர் ஆரவ் விடாமுயற்சி படத்தின் வில்லன்களாக நடிக்க இருக்கின்றனர்.

அர்ஜுன் தாஸ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது ஆரவ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

MUST READ