spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉலக அளவில் 50 கோடியை நெருங்கும் 'விடுதலை 2'!

உலக அளவில் 50 கோடியை நெருங்கும் ‘விடுதலை 2’!

-

- Advertisement -

விடுதலை 2 படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.உலக அளவில் 50 கோடியை நெருங்கும் 'விடுதலை 2'!

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோரின் கூட்டணியில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், கௌதம் மேனன், இளவரசு, ராஜிவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் விஜய் சேதுபதி எப்படி போராளியாக மாறினார்? என்பதைப் பற்றிய திரைக்கதையாக இருந்தது. உலக அளவில் 50 கோடியை நெருங்கும் 'விடுதலை 2'!அதன்படி விஜய் சேதுபதி இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றுள்ளார். இருப்பினும் சில ரசிகர்கள் இந்த படத்தை எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர். சில ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் ஒரு வாரத்தில் உலக அளவில் ரூ. 47 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ. 35 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் ரூ. 50 கோடி நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ