spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் .... ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் …. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

-

- Advertisement -

பிரபல நடிகரும் இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் செந்தூர் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார். இதனை தனா எழுதி இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து ரியா சுமன் ,கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ் ,ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ,ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விவேக் – மெர்வின் என்கிற இசை அமைப்பாளர்கள் இந்தப் படத்திற்கு இசை அமைக்கின்றனர். நவீன் குமார் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த புதிய படத்திற்கு ஹிட்லர் என்று தலைப்படப்பட்டுள்ளதாக படக்குழுவினர் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ