spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஒரே ஆண்டில் ஏகப்பட்ட படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்கள் வெளியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹிட்லர் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் விஜய் ஆண்டனி அடுத்தது புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்குகிறார். விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தினை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ