Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் 'மார்கன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் ஆண்டனியின் மார்கன் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் ஆண்டனியின் 'மார்கன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் ஆண்டனி. நடிப்பதிலும் ஆர்வமடைய இவர் நான், சலீம், காளி, பிச்சைக்காரன் ஆகிய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர இவர் தற்போது வள்ளி மயில், சக்தித் திருமகன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் மார்கன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ககன மார்கன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது மார்கன் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தை பீட்சா, சூது கவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களை எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான்பால் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தானே தயாரித்து, இசையும் அமைத்துள்ளார். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.விஜய் ஆண்டனியின் 'மார்கன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! இவருடன் இணைந்து அஜய் திஷான், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படமானது 2025 ஜூன் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ